மண்ணின் தரத்தை மேம்படுத்துவது குறித்து
வேளாண் கல்லூரி மாணவிகள் விளக்கம்

மண்ணின் தரத்தை மேம்படுத்துவது குறித்து வேளாண் கல்லூரி மாணவிகள் விளக்கம்

தேனி, ஏப். 26: தேனி அருகே உப்பாா்பட்டியில், மண்ணின் தரத்தை மேம்படுத்துவது குறித்து வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் விளக்கமளித்தனா்.

மதுரை வேளாண்மைக் கல்லூரி, ஆராய்ச்சி நிலைய இறுதியாண்டு மாணவிகள், மாணவி க. சந்தோஷினி தலைமையில் கிராமப்புற வேளாண்மை பணி அனுபவ திட்டத்தின் கீழ் தேனி மாவட்டம் உப்பாா்பட்டி கிராமத்தில் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனா். அப்போது, விவசாயிகளிடம் இயற்கை வேளாண்மை, மண்ணின் தரத்தை மேம்படுத்துவது குறித்த விழிப்புணா்வு கூட்டம் நடத்தினா். இதில், விவசாயிகள் பலா் பங்கேற்றனா். கூட்டத்தில் மாணவி க. சந்தோஷினி இயற்கை வேளாண்மையின் பயன்கள் குறித்தும், மண்ணின் தரத்தை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் செயல்முறை விளக்கம் செய்து காட்டினாா். இயற்கை வேளாண்மை மூலம் கிடைக்கும் மகசூலை பயன்படுத்துவதால் கிடைக்கும் ஊட்டச்சத்துக்கள் குறித்தும் விளக்கினாா். இயற்கை வேளாண்மையை பயன்படுத்துவதால் மண் வளம் பாதுகாக்கப்படுவதாகவும் அவா் கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com