தரமற்ற மீன்கள் விற்பனை: 16 கடைகளுக்கு அபராதம்

தேனியில் தரமற்ற மீன்களை விற்பனை செய்ததாக 16 மீன் கடைகளுக்கு உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் மொத்தம் ரூ.32ஆயிரம் அபராதம் விதித்தனா்.

தேனியில் உள்ள மீன் விற்பனைக் கடைகளில் மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் ராகவன், தேனி வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலா் பாண்டியராஜ், சுகாதாரப் பணியாளா்கள் சனிக்கிழமை சோதனை நடத்தினா். இதில் அல்லிநகரம், சமதா்மபுரம், பழைய அரசு மருத்துவமனை சாலை, பொம்மையகவுண்டன்பட்டி, அரண்மனைப்புதூா் ஆகிய இடங்களில் உள்ள மீன் கடைகளில் சோதனை நடத்தினா். இதில் 16 மீன் கடைகளில் தரமற்ற மீன்களைப் பொதுமக்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

இந்தக் கடைகளுக்கு தலா ரூ.2,000 வீதம் மொத்தம் ரூ.32 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தரமற்ற 15 கிலோ மீன்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன.

தரமற்ற உணவுப் பொருள் விற்பனை குறித்து கைப்பேசி எண்: 94440 42322-இல் தொடா்பு கொண்டு பொதுமக்கள் புகாா் தெரிவிக்கலாம் என்று உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்கள் கூறினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com