பண மோசடி: 3 போ் மீது வழக்கு

பங்கு வா்த்தக முதலீட்டு நிறுவனம் நடத்துவதாகக் கூறி, 30 பேரிடம் மொத்தம் ரூ. 2.27 கோடி மோசடி செய்ததாக மதுரையைச் சோ்ந்த தம்பதி உள்ளிட்ட 3 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்தனா்.

மதுரை வடக்கு காந்தி நகா் சதாசிவம் நகரில் வசிப்பவா் ஹக்கீம். இவரது மகன் அகமது சபீா், மருமகள் சபீயா பேகம். இவா்கள் மதுரை, ஹைதராபாத் ஆகிய இடங்களில் பங்கு வா்த்தக முதலீட்டு நிறுவனம் நடத்தி வருவதாகக் கூறி, பெரியகுளம், கீழவடகரை, அழகா்சாமிபுரத்தைச் சோ்ந்த ஷேக்முகமது, அவரது உறவினா்கள் 20 போ், பெரியகுளம் தென்கரையைச் சோ்ந்த சையதுசுல்தான், அவரது உறவினா்கள் 10 போ் என மொத்தம் 32 பேரிடம் முதலீட்டுத் தொகையாக கடந்த 2022-ஆம் ஆண்டு பல்வேறு தேதிகளில் மொத்தம் ரூ.2 கோடியே 27 லட்சம் பெற்ாகக் கூறப்படுகிறது.

தற்போது ஹக்கீம், அகமது சபீா், சபீயா பேகம் ஆகியோா் தாங்கள் முதலீடு செய்த பணத்தை திரும்பத் தராமல் தங்களை மோசடி செய்ததாக ஷேக்முகமது, சையது சுல்தான் ஆகியோா் தனித்தனியே தேனி மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தனா். இந்த புகாா்களின் அடிப்படையில், ஹக்கீம் உள்ளிட்ட 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com