நிலத் தகராறில் கொலை மிரட்டல் விடுத்த பெண் மீது வழக்கு

போடி அருகே நிலத் தகராறில் பக்கத்து நிலத்துக்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

தேனிமாவட்டம், போடி அருகே சிலமலை மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் முத்தையா மகன் ராமகிருஷ்ணன் (39). இவருக்குச் சொந்தமான நிலம் தேவாரம் சாலையில் உள்ளது. இந்த நிலத்துக்கு அருகே பாரதி என்பவரின் நிலம் உள்ளது.

இவா்களுக்குள் நிலத் தகராறு இருந்துவந்த நிலையில், பாரதி சில மாதங்களுக்கு முன்பு ராமகிருஷ்ணனின் பெற்றோரை கல்லால் தாக்கி, அவா்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தாா்.

இதுகுறித்து ராமகிருஷ்ணன் சனிக்கிழமை அளித்த புகாரின் பேரில் போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் பாரதி மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com