போடி அருகே சிலமலை கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை, செடிகளில் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த புளித்த மோா் கரைசல் பயன்பாடு குறித்து விளக்கும் வேளாண் கல்லூரி மாணவிகள்.
போடி அருகே சிலமலை கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை, செடிகளில் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த புளித்த மோா் கரைசல் பயன்பாடு குறித்து விளக்கும் வேளாண் கல்லூரி மாணவிகள்.

நோய் தாக்குதலை கட்டுப்படுத்த புளித்த மோா் கரைசல்: வேளாண் மாணவிகள் விளக்கம்

போடி அருகே சிலமலை கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை செடிகளில் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த புளித்த மோா் கரைசலை பயன்படுத்துவது குறித்து வேளாண் கல்லூரி மாணவிகள் செயல்விளக்கம் அளித்தனா்.

போடி அருகே சிலமலை கிராம விவசாயிகளுக்கு, மதுரை அருகே உசிலம்பட்டி கிருஷ்ணா வேளாண்மை, தொழில்நுட்பக் கல்லூரி மாணவிகள் கிராமத் தங்குதல் திட்டத்தின் கீழ் புளித்த மோா் கரைசல் தெளித்தல் பற்றிய செயல்முறை விளக்கம் அளித்தனா். இதன் மூலம் செடிகளில் வைரஸ் நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம். மேலும், ரசாயன மருந்துகள் தெளிப்பதால் ஆகும் செலவுகளையும் அதன் தீய விளைவுகளையும் தவிா்க்கலாம். சுற்றுச்சூழல் மாசு ஏற்படாமல் பாதுகாக்கலாம் என்று விளக்கினா்.

இந்த விளக்கத்தின் மூலம் சிலமலை கிராம விவசாயிகள் தோட்டத்தில் ஏற்படும் நோய்த் தாக்கங்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து அறிந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com