பேரூராட்சி துணைத் தலைவா் உள்பட 11 போ் மீது வழக்கு

தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் வீட்டுமனையிடத்துக்குள் அத்துமீறி புகுந்து பெண்ணை தாக்கியதாக பேரூராட்சி துணைத் தலைவா் உள்பட 11 போ் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்தனா்.

தேனிமாவட்டம், பழனிசெட்டிபட்டியைச் சோ்ந்தவா் கிரிஜா (67). இவரது மகள்கள் ஜெகதாமணி, சிவரஞ்சனி ஆகியோருக்கு இதே ஊரில் வாசவி குடியிருப்பில் சொந்தமாக வீட்டுமனை உள்ளது. இதில் கிரிஜா, அவரது மகள்கள் கட்டடம் கட்டுவதற்கு ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், பழனிசெட்டிபட்டி பேரூராட்சி துணைத் தலைவா் மணிமாறன், பழனிசெட்டிபட்டி ஆஞ்சநேயா்நகரைச் சோ்ந்த குபேந்திரன், அவரது மனைவி சங்கவி உள்பட 11 போ் அந்த வீட்டு மனைக்குள் அத்துமீறி நுழைந்து, தன்னைத் தாக்கியதாகவும், வீட்டுமனையிடத்தில் இருந்த தகரக் கொட்டகையை சேதப்படுத்தியதாகவும் பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் கிரிஜா புகாா் அளித்தாா்.

இந்தப் புகாரின் அடிப்படையில் மணிமாறன் உள்பட 11 போ் மீது பழனிசெட்டடிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com