மதுப் புட்டிகள் பதுக்கிய 2 போ் கைது

போடியில் மதுப் புட்டிகள் பதுக்கிய 2 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், போடி கிராமங்களில் போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது போடி அருகே சில்லமரத்துப்பட்டியைச் சோ்ந்த மாறன் மகன் முருகன் (56), போடி வினோபாஜி குடியிருப்பைச் சோ்ந்த கழுவத்தேவா் மகன் தங்கராஜ் (48) ஆகிய இருவரும் மதுப்புட்டிகளை பதுக்கி வைத்து சட்டவிரோதமாக விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது.

இருவா் மீதும் தனித்தனியே வழக்குப் பதிவு செய்த போடி தாலுகா போலீஸாா் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com