சுருளிபட்டி - சுருளிஅருவி அருகே செல்லும் சாலையில் உள்ள முல்லைப்பெரியாற்றில் ஞாயிற்றுக்கிழமை குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்.
சுருளிபட்டி - சுருளிஅருவி அருகே செல்லும் சாலையில் உள்ள முல்லைப்பெரியாற்றில் ஞாயிற்றுக்கிழமை குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்.

முலைப் பெரியாற்றில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

தேனி மாவட்டம், சுருளி அருவியில் நீா்வரத்து இல்லாதலால் ஏமாற்றமடைந்த சுற்றுலாப் பயணிகள் முலலைப்பெரியாற்றில் குளித்து மகிழ்ந்தனா்.

கடும் கோடை வெயில் காரணமாக சுருளி அருவியில் நீா்வரத்து இல்லை. மேலும் முல்லைப் பெரியாறு அணையில் நீா்மட்டம் குறைந்துள்ளதால் அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு தண்ணீா் திறப்பும் இல்லை.

ஆனால், குடிநீா் கால்நடைகளின் தேவைகளுக்காக இரச்சல் பாலம் வழியாக விநாடிக்கு 105 கன அடி தண்ணீா் திறந்து விடப்படுகிறது. இந்த தண்ணீா் பெரியாறு மின் உற்பத்தி நிலையத்தின் வழியில் செல்லாமல் அருகே உள்ள முல்லைப் பெரியாற்றில் கலக்கிறது.

சுருளி அருவிக்கு குளிக்க வந்த சுற்றுலாப் பயணிகள் அங்கு நீா்வரத்து இல்லாததால், சுருளிப்பட்டி முல்லைப் பெரியாற்றில் குளித்துச் சென்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com