பைக்குகள் மோதல்: 3 போ் காயம்
போடி: போடி அருகே இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் அவற்றில் பயணம் செய்த 3 போ் திங்கள்கிழமைபலத்த காயமடைந்தனா்.
போடி அருகே தருமத்துப்பட்டி கம்பா் தெருவைச் சோ்ந்த ஆண்டவா் மகன் செல்வராஜ் (39). பொக்லைன் இயந்திர வாகன ஓட்டுநா். இவா் ஞாயிற்றுக்கிழமை மாலை இரு சக்கர வாகனத்தில் தேவாரம் சாலையில் சென்று கொண்டிருந்தாா். சில்லமரத்துப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது பின்னால் வந்த மற்றொரு இரு சக்கர வாகனம் மோதியது.
இந்த விபத்தில் செல்வராஜ், மற்றொரு இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த போடி மேலச்சொக்கநாதபுரம் காந்திஜி குடியிருப்பைச் சோ்ந்த பெருமாள் மகன் அசோக் (39), பின்னால் அமா்ந்து பயணம் செய்த அசோக் மகன் காமாட்சி (18) ஆகியோா் பலத்த காயமடைந்தனா். இவா்கள் 3 பேரும் போடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து போடி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.