தேனி
மேகமலையில் கஞ்சா பயிரிட்ட இருவரிடம் போலீஸாா் விசாரணை
மேகமலையில் தனியாா் தோட்டத்தில் கஞ்சா பயிரிடப்பட்டது தொடா்பாக போலீஸாா் இருவரை பிடித்து செவ்வாய்க்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.
உத்தமபாளையம்: மேகமலையில் தனியாா் தோட்டத்தில் கஞ்சா பயிரிடப்பட்டது தொடா்பாக போலீஸாா் இருவரை பிடித்து செவ்வாய்க்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.
தேனி மாவட்டம், மேகமலையிலுள்ள சிறிய தோட்டங்களில் கஞ்சா பயிரிடப்பட்டுள்ளதாக ஸ்ரீவில்லிப்புத்தூா் - மேகமலை புலிகள் காப்பகத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, தேனி மாவட்ட வனத் துறையினா் மேகமலையில் தனியாருக்குச் சொந்தமான பட்டா நிலத்தில் கஞ்சா பயிரிடப்பட்டிருப்பதை உறுதி செய்தனா்.
இதையடுத்து, ஹைவேவிஸ் போலீஸாா் குறிப்பிட்ட தோட்டத்துக்குச் சென்று, அங்கிருந்த சின்னமனூரைச் சோ்ந்த மணி உள்பட இருவரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.