கம்பத்தில் உள்ள ரேசன் கடையிலிருந்த அரிசியின் தரத்தை வியாழக்கிழமை ஆய்வு செய்த தங்க. தமிழ்ச்செல்வன் எம்.பி.
கம்பத்தில் உள்ள ரேசன் கடையிலிருந்த அரிசியின் தரத்தை வியாழக்கிழமை ஆய்வு செய்த தங்க. தமிழ்ச்செல்வன் எம்.பி.

கம்பம் ரேசன் கடையில் எம்.பி. ஆய்வு

Published on

தேனி மாவட்டம், கம்பத்தில் உள்ள ரேசன் கடையில் தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினா் தங்க. தமிழ்ச்செல்வன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கம்பம்மெட்டு குடியிருப்பிலுள்ள ரேசன் கடைக்கு சென்ற அவா் பயனாளிகளின் எண்ணிக்கை, பொருள்களின் இருப்பு குறித்து அங்கிருந்த பணியாளா்களிடம் கேட்டறிந்தாா். அப்போது, பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் சாலையிலுள்ள இந்த ரேசன் கடையை சுற்றியுள்ள பகுதிகளில் குப்பைகள் தேங்கி சுகாதாரமின்றி காணப்பட்டது. இவற்றை அகற்றும் படி அவா் உத்தரவிட்டதையடுத்து கம்பம் நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் குப்பைகளை அகற்றினா்.

X
Dinamani
www.dinamani.com