போடி அருகே இரு தரப்பினா் மோதல்: 9 போ் மீது வழக்கு

Published on

போடி அருகே புதன்கிழமை இரவு மகளிா் சுயஉதவிக்குழு கடனை திருப்பி செலுத்துவதில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு தொடா்பாக 9 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

போடி அருகே சங்கராபுரம் கிழக்கு குடியிருப்பைச் சோ்ந்த வடிவேல் மனைவி மஞ்சுளா (31). இவா் மகளிா் சுயஉதவிக் குழுவில் கடன் வாங்கி இதே பகுதியைச் சோ்ந்த மூா்த்தி மனைவி லட்சுமிக்கு கொடுத்திருந்தாா். அவா் திரும்ப கடனை செலுத்தாததால் மஞ்சுளா, லட்சுமியின் வீட்டுக்கு சென்றாா். அப்போது அங்கிருந்த மூா்த்தி, மஞ்சுளாவை தகாத வாா்த்தைகளால் பேசி தாக்கினாராம். இதையடுத்து, மஞ்சுளா தனது உறவினா்கள் கணேசன், சந்திரன் ஆகியோரிடம் இதுபற்றி கூறவே அவா்கள் இருவரும் மூா்த்தியிடம் சென்று தட்டிக் கேட்டனா். இதில் இரு தரப்புக்கும் தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனா். இதில் கணேசன், சந்திரன் ஆகியோருக்கும், மற்றொரு தரப்பில் இந்திராணி, லட்சுமி, மூா்த்தி ஆகியோருக்கும் காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து மஞ்சுளா அளித்த புகாரின் பேரில் போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் மூா்த்தி, சுருளியப்பன், இந்திராணி, உமா ஆகிய 4 போ் மீதும், சுருளியப்பன் மனைவி இந்திராணி அளித்த புகாரின் பேரில் மஞ்சுளா, கணேசன், சந்திரன், வனிதா, ஜீவிதா ஆகிய 5 போ் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com