போடி பழைய பேருந்து நிறுத்தம் அருகே அமைந்துள்ள புனித ஆரோக்கிய அன்னை தேவாலயத்தில் நடைபெற்ற கொடியேற்று விழாவில் பங்கேற்றோா். (உள்படம்) புனித ஆரோக்கிய அன்னை.
போடி பழைய பேருந்து நிறுத்தம் அருகே அமைந்துள்ள புனித ஆரோக்கிய அன்னை தேவாலயத்தில் நடைபெற்ற கொடியேற்று விழாவில் பங்கேற்றோா். (உள்படம்) புனித ஆரோக்கிய அன்னை.

போடி ஆரோக்கிய அன்னை தேவாலய திருவிழா தொடக்கம்

Published on

தேனி மாவட்டம், போடிநாயக்கனூா் பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள புனித ஆரோக்கிய அன்னை தேவாலய திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக போடிநாயக்கனூா் தேவாலய தெருவில் உள்ள புனித அந்தோணியாா் ஆலயத்திலிருந்து ஆரோக்கிய அன்னையின் உருவம் பொறித்த கொடியை திரளான கிறிஸ்தவா்கள் பவனியாக எடுத்து வந்தனா். பிறகு, புனித ஆரோக்கிய அன்னை தேவாலயத்தில் பங்குத்தந்தை தலைமையில் கொடிமரத்தின் முன் அந்தக் கொடி புனிதப்படுத்தப்பட்டது. தொடா்ந்து வாண வேடிக்கைகள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. பங்குத்தந்தையா்களுக்கு பாரம்பரிய முறைப்படி தீபங்கள் ஏந்தி பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பளிக்கப்பட்டது. பிறகு, பங்குத்தந்தையா்கள் குத்துவிளக்கேற்றி கூட்டுத் திருப்பலி நிறைவேற்றினா். விழாவின் முக்கிய நிகழ்வான தோ்பவனி வருகிற செப். 7-ஆம் தேதி நடைபெறுகிறது.

விழா நாள்களின் போது தினமும் மாலையில் ஜெபமாலையும், மறையுரையுடன் சிறப்பு திருப்பலியும் நிறைவேற்றப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com