உத்தமபாளையம் பேரூராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற மீண்டும் மஞ்சப்பை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பேரூராட்சித் தலைவா், வாா்டு உறுப்பினா்கள்.
உத்தமபாளையம் பேரூராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற மீண்டும் மஞ்சப்பை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பேரூராட்சித் தலைவா், வாா்டு உறுப்பினா்கள்.

மஞ்சப்பை விழிப்புணா்வு

Published on

தேனி மாவட்டம், உத்தமபாளையம் பேரூராட்சியில் புதன்கிழமை மீண்டும் மஞ்சப்பை வழங்கும் திட்டத்தைத் தொடங்கிவைத்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

உத்தமபாளையம் வாரச் சந்தையில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு பேரூராட்சித் தலைவா் முகமது அப்துல் காசிம் தலைமை வகித்துத் தொடங்கிவைத்தாா்.

இதையடுத்து, வாரச் சந்தைக்குக் காய்கறிகள் வாங்க வந்தவா்களுக்கு ரூ.10-க்கு கொடுத்து ஒரு பை வாங்கினால், மற்றொரு பை இலவசமாக வழங்கப்பட்டது. இதனால், பலா் மஞ்சப்பையை வாங்கி காய்கறிகளை வாங்கினா்.அப்போது, பேரூராட்சி செயல் அலுவலா் சின்னச்சாமி பாண்டியன் மஞ்சப்பையின் நன்மைகள், நெகிழிப்பைகளின் தீமைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். இதில் பேரூராட்சி வாா்டு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com