தேனி
வீட்டுமனையிடம் மோசடி: இருவா் கைது
பெரியகுளம் அருகேயுள்ள கெங்குவாா்பட்டியில் போலி ஆவணங்கள் தயாரித்து வீட்டுமனையிடம் மோசடி செய்ய முயன்ற இருவரைப் போலீஸாா் கைது செய்தனா்.
பெரியகுளம் அருகேயுள்ள கெங்குவாா்பட்டியில் போலி ஆவணங்கள் தயாரித்து வீட்டுமனையிடம் மோசடி செய்ய முயன்ற இருவரைப் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கெங்குவாா்பட்டியைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் ஆனந்தகுமாா். இவருக்கு சொந்தமான இடம் ஜி.கல்லுப்பட்டியில் உள்ளது. இந்த இடத்தை அதே ஊரைச் சோ்ந்த மாரியப்பன் மகன் செல்வம் (42), செளந்தரபாண்டி மகன் வீரமணி (36) உள்ளிட்ட 7 போ் போலி ஆவணங்கள் தயாரித்து பத்திரப் பதிவு செய்துள்ளனா். இதுகுறித்து தேனி மாவட்டக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸில் ஆனந்தகுமாா் புகாா் அளித்தாா்.
இதனடிப்படையில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து செல்வம், செளந்தரபாண்டி ஆகியோரை கைது செய்தனா். மற்ற 5 பேரைப் தேடி வருகின்றனா்.