தேனி
குமுளியில் புதிய சுற்றுலா போக்குவரத்துத் திட்டம் தொடக்கம்
குமுளியில் புதிய சுற்றுலாப் பேருந்து போக்குவரத்தை வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்த பீா்மேடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் வாழூா்சோழன்.
தேனி, ஆக. 30: குமுளியில் கேரள அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில், புதிய சுற்றுலாப் போக்குவரத்துத் திட்டத்தை இடுக்கி மாவட்டம், பீா்மேடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் வாழூா்சோழன் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
இந்தத் திட்டத்தில் குமுளியிலிருந்து காலை 8 மணிக்கு கேரள அரசு பேருந்து புறப்படுகிறது. இந்தப் பேருந்தில் டிக்கெட் கட்டணமாக ஓருவருக்கு ரூ.380 வசூலிக்கப்படுகிறது. குமுளியிலிருந்து பருந்துப்பாறை, வாகமண் உள்ளிட்ட இடங்களுக்குப் பயணிகள் அழைத்துச் செல்லப்படுகின்றனா். மாலையில் பேருந்து மீண்டும் குமுளிக்கு திரும்புகிறது.
சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் இந்தப் புதிய சுற்றுலாப் போக்குவரத்து திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகக் கேரள அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.