போடி மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி.
போடி மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி.

நீா்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

போடி மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி.
Published on

போடி அருகே பேரூராட்சிப் பகுதியில் நீா்நிலைகளில் இருந்த ஆக்கிரமிப்புகள் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டன.

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சி அலுவலகம் பின்புறம் 7.6 ஏக்கா் பரப்பளவில் கெப்பரெங்க கவுண்டா் ஊருணி உள்ளது. இந்த ஊருணியை சிலா் ஆக்கிரமித்து வீடுகள், மாட்டுத் தொழுவங்கள் கட்டியிருந்தனா். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி பேரூராட்சி நிா்வாகம் பலமுறை தெரிவித்தும், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை.

இந்த நிலையில், அண்மையில் நீா்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது. இதனடிப்படையில், ஆக்கிரமிப்புகளை அகற்ற மீண்டும் எச்சரிக்கை குறிப்பாணை ஆக்கிரமிப்பாளா்களுக்கு அனுப்பப்பட்டது.

இதையடுத்து, வெள்ளிக்கிழமை காவல் துறை, வருவாய்த் துறை உதவியுடன் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.

மின் வாரியம் மூலம் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு வீடுகள், மாட்டுத் தொழுவங்கள் இடித்து அகற்றப்பட்டன. தொடா்ந்து, ஓடை புறம்போக்கு பகுதிகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என பேரூராட்சி நிா்வாகம் தெரிவித்தது.

X
Dinamani
www.dinamani.com