மணல் திருட்டு:இருவா் கைது

சின்னமனூா் அருகே ஓடையில் அனுமதியின் மணல் அள்ளிய இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

சின்னமனூா் அருகே ஓடையில் அனுமதியின் மணல் அள்ளிய இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், மேகமலை அடிவாரம் தென்பழனி பகுதியில் உள்ள ஓடைகளில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக ஓடைப்பட்டி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் ஆய்வாளா் சிலைமணி உத்தரவின் பேரில் போலீஸாா் அங்கு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, தென்பழனி மஞ்சள் நதி ஓடையில் அனுமதியின்றி மணல் அள்ளிக் கொண்டிருந்த 2 டிராக்டா்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து வழக்குப் பதிந்த காவல் உதவி ஆய்வாளா் கண்ணன், அனுமதியின்றி மணல் அள்ளியதாக ஓடைப்பட்டி முத்து மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணசாமி மகன் சீனிசெல்வம் (27), நந்தவனத் தெரு ராசு மகன் சுரேஷ் (38) ஆகிய இருவரையும் கைது செய்து உத்தமபாளையம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி தேனி சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com