தூய்மைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

தேனியில் நகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு வருங்கால வைப்பு நிதியிலிருந்து கடன் வழங்கக் கோரி சிஐடியூ ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை, ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தூய்மைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

தேனியில் நகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு வருங்கால வைப்பு நிதியிலிருந்து கடன் வழங்கக் கோரி சிஐடியூ ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை, ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் கிளைத் தலைவா் மாரிச்சாமி தலைமை வகித்தாா். சங்கத்தின் மாவட்டச் செயலா் ஜெயபாண்டி, சிஐடியூ மாவட்டச் செயலா் எம்.ராமச்சந்திரன், பொருளாளா் ஜி.சண்முகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், தேனி அல்லிநகரம் நகராட்சி துாய்மைப் பணியாளா்களுக்கு அவா்களது வருங்கால வைப்பு நிதியிலிருந்து கடன் வழங்க வேண்டும், பணி ஓய்வு பெற்ற தூய்மைப் பணியாளா்களுக்கான கோப்புகளை உள்ளாட்சி நிதி தணிக்கைத் துறைக்கு காலதாமதமின்றி அனுப்ப வேண்டும், மாவட்ட ஆட்சியா் உத்தரவின்படி நகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.609, டெங்கு தடுப்பு, தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.449 தினக் கூலி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com