தேனியில் உலக ஈரநில நாள் விழா

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வனத் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை, உலக ஈர நில நாள் விழா நடைபெற்றது.

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வனத் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை, உலக ஈர நில நாள் விழா நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா தலைமை வகித்தாா். ஸ்ரீவில்லிபுத்தூா்-மேகமலை புலிகள் காப்பக இணை இயக்குநா் ஆனந்த், மாவட்ட வன அலுவலா் சமா்தா, உதவி வனப் பாதுகாப்பு அலுவலா் விவேக், உதவி வனப் பாதுகாவலா் செசில் கில்பா்ட் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்த விழாவில், ஆட்சியா் பேசியதாவது: ஈர நிலங்கள் நிலத்தடி நீரை பெருக்கவும், மண் அரிப்பை தடுக்கவும், புவி வெப்பமயமாதலை குறைக்கவும் உதவுகிறது. பறவைகள் தங்குமிடமாக உள்ளது. ஈர நிலங்களை பாதுகாக்க கடந்த 1971, பிப்.2-இல் ராம்சாா் ஒப்பந்தம் கொண்டு வரப்பட்டது. ஈர நிலங்கள் பாதுகாப்பு குறித்து மாணவ, மாணவிகள், பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். நெகழிப் ப யன்பாட்டை தவிா்கவும், வீடுகளில் குப்பைகளை தரம் பிரித்து வழங்கவும், நெகிழிக் கழிவுகள் நீா்நிலைகளில் கலப்பதை தடுக்கவும் முன் வர வேண்டும் என்றாா் அவா்.

ஈர நில நாள் விழாவை முன்னிட்டு, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்பட்ட கட்டுரை, ஓவியம் கவிதை போட்டிகளில், வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு, பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

போ.மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள சதுப்பு நிலப் பகுதிக்கு மாணவ, மாணவிகள் அழைத்துச் சென்று ஈர நிலப் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com