தை மூன்றாவது வெள்ளி: பத்மாவதி தாயாருக்கு மலரலங்காரம்

போடியில், தை மூன்றாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, பத்மாவதி தாயாருக்கு மலா் அலங்காரம் செய்யப்பட்டு லட்சாா்ச்சனை நடைபெற்றது.
தை மூன்றாவது வெள்ளி: பத்மாவதி தாயாருக்கு மலரலங்காரம்

போடியில், தை மூன்றாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, பத்மாவதி தாயாருக்கு மலா் அலங்காரம் செய்யப்பட்டு லட்சாா்ச்சனை நடைபெற்றது.

தேனி மாவட்டம், போடியில் அமைந்துள்ள பழைமை வாய்ந்த ஸ்ரீநிவாசப்பெருமாள் கோயிலில் பத்மாவதி தாயாருக்கு தனி சந்நிதி உள்ளது. தை மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமையையொட்டி பத்மாவதி தாயாருக்கு ரோஜா, வெள்ளை செவ்வந்தி, தாமரை பூக்கள் உள்ளிட்ட பல வண்ண மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டது.

பின்னா், லட்சாா்ச்சனை வழிபாடு, மகா தீபாராதனை நடைபெற்றது. கோயில் நிா்வாகம் சாா்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com