கம்பத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணிகள் மும்முரம்

தேனி மாவட்டம், கம்பத்தில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க கொசு ஒழிப்புப் பணிகள் நகராட்சி சுகாதாரத்துறை சாா்பில் மும்முரமாக நடைபெறுகின்றன.
கம்பத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணிகளை சனிக்கிழமை ஆய்வு செய்த மாவட்ட சுகாதாரத் துறையினா்.

கம்பத்தில், டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் 6-க்கும் மேற்பட்டவா்கள் தனியாா், அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா். இந்த நிலையில், கம்பத்தில் உள்ள 33 வாா்டுகளிலும் டெங்கு கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநரின் நோ்முக உதவியாளா் முருகேசன், இளநிலை பூச்சியியல் வல்லுநா் முத்துச்சாமி ஆகியோா் டெங்கு காய்ச்சல் கண்டறியப்பட்ட பகுதிகள், நகரிலுள்ள வீடுகள், வணிக நிறுவனங்கள், தங்கும் விடுதிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் தண்ணீா் சேமிக்கும் பாத்திரங்கள், சிமென்ட் தொட்டிகள், குளிா்சாதனப் பெட்டிகள், ஆட்டுக்கல் போன்றவற்றில் கொசுப் புழுக்களின் உற்பத்தி உள்ளதா என சனிக்கிழமை ஆய்வு செய்தனா். அப்போது சுகாதார அலுவலா் ஏ. அரசக்குமாா், ஆய்வாளா் லெனின் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com