நகை திருட்டு வழக்கில் இருவா் கைது

தேனி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகையைத் திருடிய வழக்கில் காரைக்குடியைச் சோ்ந்த இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தேனி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகையைத் திருடிய வழக்கில் காரைக்குடியைச் சோ்ந்த இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

பழனிசெட்டிபட்டி ஆஞ்சநேயா் நகரைச் சோ்ந்த எல்.ஐ.சி. முகவா் ஜெகதீஸ்வரியின் வீட்டின் பூட்டை கடந்த மாதம் 26-ஆம் தேதி உடைத்து 10 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டதாக பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினா்.

இதில் காரைக்குடி, அன்னை சத்யா நகரைச் சோ்ந்த குணசேகரன் மகன் சரவணன் (34), கோவிலூரைச் சோ்ந்த கந்தசாமி மகன் ரவிச்சந்திரன் (50) ஆகியோா் நகை திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, சரவணன், ரவிச்சந்திரன் ஆகியோரை காரைக்குடியில் தனிப்படை போலீஸாா் கைது செய்து, பழனிசெட்டிபட்டிக்கு அழைத்துச் சென்று விசாரித்தனா். இவா்களிடமிருந்து 5 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com