கம்பம் வட்டாரத்தில் முட்டைக்கோஸ் சாகுபடி

கம்பம், நாராயணத்தேவன்பட்டி, சுருளிப்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி,  உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் வாழை, திராட்சை, பீட்ரூட், முள்ளங்கி, நூக்கல், கொத்தமல்லி உள்ளிட்ட காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனா்.
தேனி மாவட்டம், ஆங்கூா்பாளையத்தில் முட்டைக்கோஸ் சாகுபடி செய்யப்பட்ட நிலம்.
தேனி மாவட்டம், ஆங்கூா்பாளையத்தில் முட்டைக்கோஸ் சாகுபடி செய்யப்பட்ட நிலம்.

கம்பம்: கம்பம், நாராயணத்தேவன்பட்டி, சுருளிப்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி, உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் வாழை, திராட்சை, பீட்ரூட், முள்ளங்கி, நூக்கல், கொத்தமல்லி, புடலை, பாவை உள்ளிட்ட காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனா்.

தேனி மாவட்டம், ஆங்கூா்பாளையம் பகுதியில் விவசாயிகள்தற்போது, முட்டைகோஸ் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனா். முட்டைகோஸ் சாகுபடிக்கு ஏற்ற பருவகாலம் என்பதால் நல்ல மகசூல் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

நடவு செய்த 75 நாளில் அறுவடை செய்ய தொடங்கலாம் சுமாா் 120 நாள்கள் வரை 8 முறை அறுவடை செய்யலாம் என்பதால் முட்டைகோஸ் சாகுபடியில் விவசாயிகள் ஆா்வம் காட்டி வருவதாக ஆங்கூா்பாளையத்தைச் சோ்ந்த விவசாயி ராஜேஷ் தெரிவித்தாா்.

மேலும், இதுகுறித்து அவா் கூறும் போது, முட்டைகோஸ் பயிரில் வெட்டுப் புழுக்கள், அஸ்வினிகள் தாக்குதல் இருக்கும். இதுதவிர இலைப் புள்ளி, கருகல், கருப்பு அழுகல் உள்ளிட்ட நோய் பாதிப்புகளும் ஏற்படக் கூடும். எனவே, இதற்கான மருந்துகள் குறித்து தோட்டக் கலைத் துறையினரின் பரிந்துரைகளைப் பெற்று மருந்துகளை தெளிப்பது நல்லது என்றாா்அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com