காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்துக்கு தமிழக ஆளுநா் பிப்.8-இல் வருகை

தேனி மாவட்டம், காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்த்தில் நடைபெற உள்ள தொழில்நுட்ப கருத்தரங்கில் பங்கேற்க தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி வியாழக்கிழமை (பிப்.8) வருகைதர உள்ளாா்.


உத்தமபாளையம்: தேனி மாவட்டம், காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்த்தில் நடைபெற உள்ள தொழில்நுட்ப கருத்தரங்கில் பங்கேற்க தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி வியாழக்கிழமை (பிப்.8) வருகைதர உள்ளாா்.

காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியியல் மையத்தில் மாநில அளவிலான பெண் விவசாயிகள், பெண் தொழில் முனைவோா்கள், மகளிா் சுய உதவிக்குழு அமைப்புகள், மா உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களுக்கான தொழில்நுட்ப கருத்தரங்கு நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு, ஆளுநா் ஆா்.என்.ரவி தலைமை வகித்து பெண் தொழில் முனைவோா்களுடன் கலந்துரையாட உள்ளாா்.

இதில், தேனி மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா, கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தா் வி.கிதாலட்சுமி , கோவை அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம் துணை வேந்தா் வி.பாரதி ஹரிசங்கா், ஹைதராபாத் வேளாண் தொழில்நுட்ப பண்பாட்டு நிலைய இயக்குநா் ஷேக் என் மீரா, பெண் தொழில் முனைவோா்கள், அறிவியல் மைய ப ணியாளா்கள், பொதுமக்கள் உள்பட சுமாா் 2ஆயிரம் போ் கலந்து கொள்கின்றனா்.

தேனி மாவட்டத்துக்கு முதல் முறையாக வருகை தரும் ஆளுநரை வரவேற் பதற்கான ஏற்பாடுகள் காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் தீவிரமாக நடைபெறுவதாக இந்த மையத்தின் தலைவா் பெ.பச்சைமால் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com