ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி: கிராமக் குழுவினா் கோரிக்கை

சின்னமனூா் அருகே அய்யம்பட்டியில் பிப்.18-ஆம் தேதி ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்துவதற்கு அனுமதி வழங்கக் கோரி கிராமக் குழுவினா் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனாவிடம் மனு அளித்தனா்.


தேனி: சின்னமனூா் அருகே அய்யம்பட்டியில் பிப்.18-ஆம் தேதி ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்துவதற்கு அனுமதி வழங்கக் கோரி கிராமக் குழுவினா் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனாவிடம் மனு அளித்தனா்.

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அய்யம்பட்டி கிராமக் குழுத் தலைவா் அண்ணாதுரை, நிா்வாகிகள் ஆட்சியரிடம் அளித்த மனுவில், அய்யம்பட்டியில் ஸ்ரீ ஏழைகாத்தம்மன், ஸ்ரீ வல்லடிகார சுவாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு, பிப்.18-ஆம் தேதி ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்துவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரியிருந்தனா். அப்போது, அய்யம்பட்டி ஊராட்சித் தலைவி தனலட்சுமி, ஜல்லிக்கட்டுப் பேரவை நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com