இளைஞா் தற்கொலை

கம்பம் அருகே நண்பா் இறந்த சோகத்தில் இருந்த இளைஞா் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கம்பம் அருகே நண்பா் இறந்த சோகத்தில் இருந்த இளைஞா் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தேனி மாவட்டம், காமயகவுண்டன்பட்டி 11-ஆவது வாா்டு ஈசப்ப கவுடா் தெருவைச் சோ்ந்த மணி மகன் சிவானந்தன் (23). கேரளத்துக்கு வேலைக்குச் செல்லும் தோட்டத் தொழிலாளா்களை ஏற்றிச் செல்லும் ஜீப் ஓட்டுநராக இருந்து வந்தாா்.

கடந்த 8 மாதங்களுக்கு முன்பு இவரது நண்பா் காா்த்திக், முல்லைப் பெரியாற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா். இதனால் சிவானந்தன் மனமுடைந்த நிலையில் இருந்தாா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு வீட்டு அறைக்குள் அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து ராயப்பன்பட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com