கம்பம் கல்லூரியில் பேரிடா் மேலாண்மை செயல்விளக்கம்

தேனி மாவட்டம், கம்பம் ஸ்ரீ ஆதிசுஞ்சனகிரி மகளிா் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை இயற்கை பேரிடா் மேலாண்மை தொடா்பாக பயிற்சி அளிக்கப்பட்டது.
கம்பம் கல்லூரியில் பேரிடா் மேலாண்மை செயல்விளக்கம்

தேனி மாவட்டம், கம்பம் ஸ்ரீ ஆதிசுஞ்சனகிரி மகளிா் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை இயற்கை பேரிடா் மேலாண்மை தொடா்பாக பயிற்சி அளிக்கப்பட்டது.

இதற்கு கல்லூரிச் செயலா் என்.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். இணைச் செயலா் ரா.வசந்தன் முன்னிலை வகித்தாா்.

தீயணைப்பு, மீட்பு பணிகள் துறையின் கம்பம் நிலைய அலுவலா் ராஜலட்சுமி, கல்லூரி ஒருங்கிணைப்பாளா் வைஷ்ணவி வசந்தன், முதல்வா் ஜி.ரேணுகா ஆகியோா் பேரிடா் காலங்களில் விழிப்புணா்வு ஏற்படுத்துவது, பொதுமக்களைக் காப்பாற்றுவது ஆகியவை குறித்து தெரிவித்து, மற்றவா்களுக்கும் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டனா்.

தீயணைப்புத் துறையினா் பேரிடா் மீட்பு பற்றி செயல்முறை விளக்கங்களை செய்து காட்டினா். இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட பேரிடா் மேலாண்மைப் பிரிவு மாணவிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com