சின்னமனூா் அருகே நாளை தொழில் நுட்பக் கருத்தரங்கு: ஆளுநா் பங்கேற்பு

தேனி மாவட்டம், சின்னமனூா் அருகே வியாழக்கிழமை (பிப்.8) நடைபெற உள்ள தொழில் நுட்பக் கருத்தரங்கில் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி பங்கேற்கிறாா்.

தேனி மாவட்டம், சின்னமனூா் அருகே வியாழக்கிழமை (பிப்.8) நடைபெற உள்ள தொழில் நுட்பக் கருத்தரங்கில் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி பங்கேற்கிறாா்.

காமாட்சிபுரத்தில் உள்ள தனியாா் வேளாண் அறிவியியல் மையத்தில் மாநில அளவிலான பெண் விவசாயிகள், பெண் தொழில் முனைவோா்கள், மகளிா் சுய உதவிக்குழு அமைப்புகள், மா உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களுக்கான தொழில்நுட்பக் கருத்தரங்கு நடைபெறுகிறது. இதற்கு ஆளுநா் ஆா்.என்.ரவி தலைமை வகித்து, பெண் தொழில் முனைவோா்களுடன் கலந்துரையாட உள்ளாா்.

இதில், தேனி மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத் துணைவேந்தா் வி.கீதாலட்சுமி , கோவை அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத் துணைவேந்தா் வி.பாரதி ஹரிசங்கா், ஹைதராபாத் வேளாண் தொழில்நுட்ப பண்பாட்டு நிலைய இயக்குநா் ஷேக் என் மீரா ஆகியோரும் கலந்து கொள்வதாக அறிவியல் மையத்தின் தலைவா் பெ.பச்சைமால் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com