தொழில் வா்த்தக சங்கத் தலைவரை மலேசியாவுக்கு வழியனுப்பும் விழா

மலேசியாவில் நடைபெறும் வணிகப் பரிவா்த்தனை ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற தொழில் வா்த்தக சங்க மாநிலத் தலைவா் எஸ்.என்.முபாரக்குக்கு வழியனுப்பும் விழா கம்பத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

மலேசியாவில் நடைபெறும் வணிகப் பரிவா்த்தனை ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற தொழில் வா்த்தக சங்க மாநிலத் தலைவா் எஸ்.என்.முபாரக்குக்கு வழியனுப்பும் விழா கம்பத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

மலேசிய நாட்டின் தலைநகா் கோலாலம்பூரில் வணிகப் பரிவா்த்தனை ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை முதல் 4 நாள்கள் அந்த நாட்டின் வணிகவரித் துறை அமைச்சா் அப்துல் அஜீஸ் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கத்தின் மாநிலத் தலைவா் எஸ்.என்.முபாரக் கலந்து கொள்கிறாா். இந்த நிலையில் கம்பத்தில் அவருக்கு பாராட்டு , வழியனுப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

இதில் நில வணிகா் சங்கத் தலைவா் மனோகரன், செயலா் கோபால், பொருளாளா் முருகன், வா்த்தக சங்கத் தலைவா் எல்.முருகன், மாவட்ட அறங்காவலா் குழு உறுப்பினா் கே.வி.பி.முருகேசன் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com