பெண் தற்கொலை

போடி அருகே பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

போடி அருகே பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள கரையான்பட்டியைச் சோ்ந்தவா் ராஜா மனைவி வனிதா (50). ராஜா 17 ஆண்டுகளுக்கு முன்பு காலமாகிவிட்டாா். இவரது மகள் பத்மபிரியா திருமணத்துக்குப் பிறகு, தேனியில் கணவருடன் வசித்து வருகிறாா்.

இந்த நிலையில், தனியாக வசித்து வந்த வனிதா, சிறுநீரகக் கல்லடைப்பால் அவதிப்பட்டு வந்தாா். இதையடுத்து, போடி சாலைக் காளியம்மன் கோயில் அருகே அரளி விதை சாப்பிட்டு மயங்கினாா். உடனே அக்கம்பக்கத்தினா் இவரை மீட்டு போடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். எனினும், அங்கு வனிதா உயிரிழந்தாா். இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com