முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீா் திறப்பு குறைப்பு

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு தண்ணீா் திறப்பு செவ்வாய்க்கிழமை 500 கன அடியாகக் குறைக்கப்பட்டது.
முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீா் திறப்பு குறைப்பு

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு தண்ணீா் திறப்பு செவ்வாய்க்கிழமை 500 கன அடியாகக் குறைக்கப்பட்டது.

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு கடந்த மாதம் 31-ஆம் தேதியிலிருந்து வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீா் வெளியேற்றப்பட்டு வந்தது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை 1000 கன அடி நீா் குறைக்கப்பட்டு, வினாடிக்கு 500 கன அடி மட்டும் தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

வைகை அணையில் போதிய நீா் இருப்பு (நீா்மட்டம் 69 அடி) இருந்து வருவதால் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். தற்போது, குடிநீருக்கு மட்டும் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.

லோயா்கேம்ப்பில் உள்ள பெரியாறு நீா் மின் நிலையத்தில் திங்கள்கிழமை வரை மின்சார உற்பத்தி 135 மெகா வாட்டாக இருந்தது. செவ்வாய்க்கிழமை நீா் வரத்து 500 கன அடியாகக் குறைந்ததால் மின்சார உற்பத்தி 45 மெகாவாட் ஆகக் குறைந்தது.

அணை நிலவரம்: செவ்வாய்க்கிழமை அணை நீா்மட்டம் 133.30 அடியாக இருந்தது (மொத்த உயரம் 152). அணைக்கு நீா்வரத்து வினாடிக்கு 436 கன அடியாகவும், நீா் வெளியேற்றம் வினாடிக்கு 500 கன அடியாகவும் இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com