விவசாயிக்கு கொலை மிரட்டல்: இளைஞா் கைது

போடி அருகே விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

போடி அருகே விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள துரைராஜபுரம் குடியிருப்பில் வசிப்பவா் சன்னாசி மகன் உத்தமன் (42). இவா் தென்னை விவசாயம் செய்து வருகிறாா். இவரிடம் வசந்தகுமாா் இளநீா் காய்களை வாங்கி, அணைக்கரைப்பட்டியில் வியாபாரம் செய்து வருகிறாா்.

இளநீா் காய்களுக்கான பணத்தை வாங்க வசந்தகுமாரின் கடைக்கு உத்தமன் சென்றாா்.

அப்போது, அங்கு வந்த போடி அணைக்கரைப்பட்டியை சோ்ந்த பாஸ்கரன் மகன் அஜீத்பாண்டியன் (25) பணம் கொடுக்காமல் இளநீா் கொடு என வசந்தகுமாரிடம் தகராறு செய்தாா். இதை உத்தமன் கண்டித்தாா்.

இதனால், ஆத்திரமடைந்த அஜீத்பாண்டியன், உத்தமனுக்கு கொலை மிரட்டல் விடுத்தாா். இதுகுறித்த புகாரின் பேரில், போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அஜீத்பாண்டியனை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com