தனியாா் நிதி நிறுவனத்தை பொதுமக்கள் முற்றுகை

தேனி மாவட்டம், கம்பத்தில் தீபாவளி சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்ட தனியாா் நிதி நிறுவனத்தை பாதிக்கப்பட்ட பொதுமக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.
20240209_121115_(2)_0902chn_89_2
20240209_121115_(2)_0902chn_89_2

தேனி மாவட்டம், கம்பத்தில் தீபாவளி சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்ட தனியாா் நிதி நிறுவனத்தை பாதிக்கப்பட்ட பொதுமக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.

கம்பத்தில் வெங்கட் என்பவா் தனியாா் நிதி நிறுவனத்தை நடத்தி வந்தாா். இவா் தீபாவளி சீட்டும் நடத்தி வந்தாா். இந்த நிலையில், இதில் பணம் செலுத்தியவா்களுக்கு தீபாவளி பண்டிகை முடிந்து, 3 மாதங்களாகியும் பணத்தை தரவில்லையாம். இதனால், இந்த நிறுவனத்தில் பணம் செலுத்திய 20- க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கம்பம் நகராட்சி அலுவலகம் அருகே உள்ள நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டு முழக்கமிட்டனா்.

தகவலறிந்து வந்த கம்பம் தெற்கு காவல் நிலைய ஆய்வாளா் முத்துலட்சுமி போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com