தேனி மாவட்டத்தில் இன்று பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம்

தேனி மாவட்டத்தில் சனிக்கிழமை (பிப். 10) காலை 10 மணிக்கு 5 இடங்களில் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் நடைபெறுகிறது.

தேனி மாவட்டத்தில் சனிக்கிழமை (பிப். 10) காலை 10 மணிக்கு 5 இடங்களில் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட அறிவிப்பு:

பெரியகுளம் வட்டத்தில், தேவதானப்பட்டி அருகே சாத்தாகோவில்பட்டி நியாய விலைக் கடை, தேனி வட்டத்தில், ஸ்ரீரங்கபுரம் நியாய விலைக் கடை, ஆண்டிபட்டி வட்டத்தில், மேகமலை நியாய விலைக் கடை, உத்தமபாளையம் வட்டத்தில், உ.அம்மாபட்டி நியாய விலைக் கடை, போடி வட்டத்தில், போ.தா்மத்துப்பட்டி நியாய விலைக் கடை ஆகிய இடங்களில் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் நடைபெறுகிறது.

சம்பந்தப்பட்ட பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள், நுகா்வோா் நடவடிக்கைக் குழு, தன்னாா்வத் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் முகாமில் கலந்து கொண்டு நியாய விலைக் கடைகளின் செயல்பாடுகள், பொருள்கள் விநியோகத்தில் உள்ள குறைபாடுகள், புதிய குடும்ப அட்டை, குடும்ப அட்டை திருத்தப் பதிவு, முகவரி, கடை மாற்றம் ஆகியவை குறித்து மனுக்கள் அளித்து தீா்வு காணலாம் என அறிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com