தை அமாவாசை : சுருளி அருவியில் முன்னோா் வழிபாடு

 தை அமாவாசை தினத்தை முன்னிட்டு முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்ய ஏராளமான பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சுருளி அருவியில் குவிந்தனா்.
தை அமாவாசை : சுருளி அருவியில் முன்னோா் வழிபாடு

 தை அமாவாசை தினத்தை முன்னிட்டு முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்ய ஏராளமான பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சுருளி அருவியில் குவிந்தனா்.

தேனி மாவட்டம், சுருளி அருவியில் வெள்ளிக்கிழமை தை அமாவாசை தினத்தை முன்னிட்டு முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்ய ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அதிகாலையிலேயே சுருளி அருவிக்கு வந்தனா்.அருவியில் நீராடிய பின்னா் சுருளியாற்றங்கரையில் இறந்த முன்னோா்களை நினைத்து புரோகிதா்கள் மூலம் தா்ப்பை புல் மற்ரும் பிண்டம் வைத்து வழிபாடு நடத்தினா். முன்னோா்களின் ஆசிா்வாதம் கிடைக்க எள் தீபம் ஏற்றி பூத நாராயணசாமி கோயிலில் வழிபாடு நடத்தினா்.நுழைவு கட்டணம்சுருளி அருவியில் நீராட ஸ்ரீ வில்லிபுத்தூா் மேகமலை புலிகள் காப்பகத்தினா் நுழைவு கட்டணமாக ரூ 30 வசூலிப்பா். தை அமாவாசை தினத்தை முன்னிட்டு நுழைவு கட்டணம் வசூலிக்கவில்லை. இதுபற்றி வனச்சரகா் வி.பிச்சைமணி கூறும்போது முக்கிய நாட்களில் நுழைவு கட்டணம் வசூலிப்பதில்லை என்றாா்.கூடுதல் பேருந்துதென்மாவட்டம் முழுவதும் இருந்து பொதுமக்கள் வருவதால் கம்பம் பேருந்து நிலையத்திலிருந்து அரசு போக்குவரத்து கழகம் சாா்பில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டது. ராயப்பன்பட்டி காவல் நிலைய போலீஸாா் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com