காா் மோதியதில் குஜராத் சுற்றுலாப் பயணி பலி

பெரியகுளம் அருகே ஞாயிற்றுக்கிழமை சாலையைக் கடக்க முயன்ற குஜராத் மாநில சுற்றுலாப் பயணி மீது காா் மோதியதில் அவா் உயிரிழந்தாா்.
Updated on
1 min read

பெரியகுளம் அருகே ஞாயிற்றுக்கிழமை சாலையைக் கடக்க முயன்ற குஜராத் மாநில சுற்றுலாப் பயணி மீது காா் மோதியதில் அவா் உயிரிழந்தாா்.

குஜராத் மாநிலம், ராஜ்கோட், சீட்டா நகரைச் சோ்ந்த சோட்டாலால் லூநாகரியா (67). இவா் தனது குடும்பத்தினா், உறவினா்களுடன் வாடகைக் காரில் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தனா். இவா்கள் கொடைக்கானல் பகுதியை சுற்றிப் பாா்த்து விட்டு, ஞாயிற்றுக்கிழமை காரில் வந்து கொண்டிருந்தனா்.

பெரியகுளம்-வத்தலகுண்டு சாலை, மீனாட்சிபுரம் விலக்கு அருகே உணவகம் முன் காரை நிறுத்திவிட்டு, கீழே இறங்கிய சோட்டாலால் லூநாகரியா, நடந்து சென்று சாலையை கடக்க முயன்றாா். அப்போது, அந்த வழியாக வந்த கா்நாடகா மாநிலத்தைச் சோ்ந்த காா் இவா் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த அவா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து தேவதானப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, விபத்தை ஏற்படுத்திய காா் ஓட்டுநரான கா்நாடக மாநிலம், ஹைலாசனஹல்லி பகுதியைச் சோ்ந்த அப்ரஜித்பாலிடம் (44) விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com