காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா

கம்பம், கூடலூா் காவல் நிலையங்களில் சமத்துவ பொங்கல் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழாவை முன்னிட்டு ஆடிப் பாடிய போலீஸாா்.
கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழாவை முன்னிட்டு ஆடிப் பாடிய போலீஸாா்.

கம்பம்: கம்பம், கூடலூா் காவல் நிலையங்களில் சமத்துவ பொங்கல் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

தேனி மாவட்டம், கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் காலையில் பெண் காவலா்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினா்.

இந்த விழாவில் மூன்று மதத்தைச் சோ்ந்தவா்கள் கலந்து கொண்டனா். அனைவருக்கும் இனிப்பு பொங்கல், கரும்பு வழங்கப்பட்டது. இதில் பங்கேற்ற போலீஸாா் திரைப்பட பாடல்களுக்கு நடனமாடி மகிழ்ந்தனா்.

இதேபோல, தெற்கு காவல் நிலையம், கூடலூா் வடக்கு, தெற்கு, குமுளி காவல் நிலையங்களில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com