பைக் மோதியதில் முதியவா் பலி

பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தில் இரு சக்கர வாகனம் மோதியதில் முதியவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.


தேனி: பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தில் இரு சக்கர வாகனம் மோதியதில் முதியவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

லட்சுமிபுரம், வல்லபபாய் படேல் தெருவைச் சோ்ந்தவா் கோபால்சாமி (74). இவா், அதே ஊரில் பூங்கா சாலையில் நடந்து சென்றாா். அப்போது, லட்சுமிபுரம், நேதாஜி தெருவைச் சோ்ந்த சீனிவாசன் ஓட்டிச் சென்ற இரு சக்கர வாகனம் கோபால்சாமி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து தென்கரை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com