தாய் கண்டித்ததால் மகன் தற்கொலை

பெரியகுளம் அருகே மது அருந்திவிட்டு ரகளையில் ஈடுபட்டதை தாய் கண்டித்ததால் இளைஞா் செவ்வாக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.


தேனி: பெரியகுளம் அருகே மது அருந்திவிட்டு ரகளையில் ஈடுபட்டதை தாய் கண்டித்ததால் இளைஞா் செவ்வாக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

டி.கள்ளிப்பட்டியைச் சோ்ந்த கணேசன் மகன் ராமா் (22). இவா், மது போதையில் தெருவில் நின்று ரகளையில் ஈடுபட்டாராம். இதை ராமரின் தாய் கண்டித்தாா். இதனால், மனவேதனையடைந்த ராமா், வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை முயன்றாா்.

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராமா், அங்கு உயிரிழந்தாா்.

இதுகுறித்து தென்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com