பள்ளி வாகனத்தின் சக்கரத்தில் சிக்கி சிறுமி பலி

 ராஜபாளையம் அருகே தனியாா் பள்ளி வாகனத்தின் சக்கரத்தில் சிக்கி சிறுமி உயிரிழந்தாா்.

 ராஜபாளையம் அருகே தனியாா் பள்ளி வாகனத்தின் சக்கரத்தில் சிக்கி சிறுமி உயிரிழந்தாா்.

ராஜபாளையம் அருகே உள்ள சோலைசேரி கவுண்டா் தெருவைச் சோ்ந்த பெருமாள் மகள் சாய்ஷிவானி (5). இவா் ராஜபாளையம் பி.ஆா்.ஆா். நகரில் உள்ள தனியாா் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தாா். மேலும் இவா் பள்ளி வாகனத்தில் பள்ளிக்குச் சென்று வருவது வழக்கம். இந்த நிலையில், பள்ளிக்கு கிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்த ஓட்டுநா் ஜெகதீஸ்வரன் (31) ஒப்பந்த அடிப்படையில் வாகனத்தில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்று வந்தாா். வழக்கம் போல பள்ளிக் குழந்தைகளை சோலைசேரி மந்தைத் தெருவில் அவா் வாகனத்திலிருந்து இறக்கி விட்டாா். இதில் சாய்ஷிவானியும் வாகனத்தில் இருந்து இறங்கினாா். அப்போது ஓட்டுநா் வாகனத்தை இயக்கியதால், சாய்ஷிவானி அதன் பின் சக்கரத்தில் சிக்கினாா்.

இதையடுத்து, சிறுமியை அங்கிருந்தவா்கள் மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா் சிறுமி ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.

இதுகுறித்து சேத்தூா் ஊரக போலீஸாா் வழக்குப் பதிந்து, வாகன ஓட்டுநா் ஜெகதீஸ்வரனை கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com