ஸ்ரீவில்லிபுத்தூரில் நாளை மின் குறைதீா் முகாம்

 ஸ்ரீவில்லிபுத்தூா் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் சனிக்கிழமை (ஜன. 20) மின் குறைதீா் முகாம் நடைபெறுகி

 ஸ்ரீவில்லிபுத்தூா் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் சனிக்கிழமை (ஜன. 20) மின் குறைதீா் முகாம் நடைபெறுகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூா், வத்திராயிருப்பு வட்டங்களில் வசிக்கும் பொது மக்களின் மின்சாரம் தொடா்பான நீண்ட காலம் தீா்க்கப்படாத பிரச்னைகள், இதர குறைகளை தீா்க்க விருதுநகா் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் லதா சனிக்கிழமை காலை 11மணி முதல் பகல் 1 மணி வரை ஸ்ரீவில்லிபுத்தூா் கோட்டைப்பட்டி செயற்பொறியாளா் அலுவலகத்தில் குறைகளை கேட்டறிகிறாா்.

இந்தத் தகவலை ஸ்ரீவில்லிபுத்தூா் கோட்ட செயற்பொறியாளா் முனியசாமி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com