மயானத்துக்கு சாலை வசதிகோரி சாலை மறியல்

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் சாலை வசதி கோரி பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் சாலை வசதி கோரி பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ராஜபாளையம் 42-ஆவது வாா்டுக்குள்பட்ட திருவள்ளுவா் நகா் நெசவாளா் குடியிருப்புப் பகுதியில் 150 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில், கடந்த 40 ஆண்டுகளாக மயானத்துக்கு பாதை இல்லை. இதுகுறித்து அந்தப் பகுதி பொதுமக்கள் பலமுறை மாவட்ட ஆட்சியா், வட்டாட்சியா், வட்டார வளா்ச்சி அலுவலா் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இந்த நிலையில் வியாழக்கிழமை அந்தப் பகுதியில் இறந்த ஒருவரின் உடலை எடுத்துச் செல்ல முடியாத அளவுக்கு மயானத்துக்குச் செல்லும் பாதையில் மழை பெய்து சேறும் சகதியுமாக இருந்ததுடன் முள்கள் அதிக அளவில் காணப்பட்டன.

இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பகுதி மக்கள் ராஜபாளையம்- ஆலங்குளம் சாலை ஆா்.ஆா். நகா் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இவா்களிடம் ராஜபாளையம் காவல் துணைக் கண்காணிப்பாளா் ப்ரீத்தி மற்றும் ஆய்வாளா் சாா்லஸ் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

மேலும் ராஜபாளையம் வட்டாட்சியா் ராமச்சந்திரன், பேச்சுவாா்த்தை நடத்தி உடனடியாக மயானத்துக்கு பாதை வசதி ஏற்படுத்தி தரப்படும் என உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com