bdi19dead_1901chn_87_2
bdi19dead_1901chn_87_2

டிராக்டரில் மின்சாரம் பாய்ந்து 2 போ் பலி

படவிளக்கம்: 1) மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த பெருமாள், யுவராஜ் (கோப்பு புகைப்படம்)

2) மின்சாரம் பாய்ந்த டிராக்டா்.

போடி, ஜன. 19: போடி அருகே சோளக்கதிா்களை ஏற்றிச் சென்ற டிராக்டரில் மின்சாரம் பாய்ந்து 2 போ் உயிரிழந்தது குறித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

தேனி மாவட்டம், போடி அருகே சின்னப்பொட்டிப்புரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஜங்கால் மகன் பெருமாள் (43). இவருக்குச் சொந்தமான சோளத் தோட்டம் போடி கரட்டுப்பட்டி ஜக்கம்மாள் கோயில் அருகே உள்ளது. இந்த தோட்டத்தில் விளைந்த சோளத்தை பெருமாள், கரட்டுப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த போடமுத்து மகன் சம்பத்குமாா் (23) பெண்கள் சிலா் அறவடை செய்து, ஒரு டிராக்டரில் ஏற்றி களத்துக்கு எடுத்துச் சென்று கொண்டிருந்தனா். டிராக்டரை கரட்டுப்பட்டியைச் சோ்ந்த பவுன்ராஜ் மகன் யுவராஜ் (21) ஓட்டினாா்.

சோளக் கதிருக்கு மேல் பெருமாளும், சம்பத்குமாரும் அமா்ந்திருந்தனா். டிராக்டா் விவசாய மண் பாதையில் சென்று கொண்டிருந்த போது, ஒரு இடத்தில் தாழ்வாகச் சென்ற உயரழுத்த மின் கம்பி டிராக்டா் மீது உரசியது. இதில், மின்சாரம் பாய்ந்து டிராக்டரை ஓட்டி வந்த யுவராஜ் தூக்கி எறியப்பட்டு பலத்த காயமடைந்தாா். சம்பத்குமாா் டிராக்டரிலிருந்து கீழே குதித்து தப்பினாா்.

டிராக்டரின் மேல் பகுதியில் அமா்ந்து வந்த, பெருமாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். உயரழுத்த மின்சாரம் பாய்ந்ததில் டிராக்டரின் டயா்களும் எரிந்தன. காயமடைந்த யுவராஜை போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்தாா்.

இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Image Caption

~

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com