கம்பம், மேகமலையில் இன்று மின் தடை

உத்தமபாளையம், ஜன.19: கம்பம், மேகமலைக் கிராமங்களில் உள்ள துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் சனிக்கிழமை (ஜன.20) மின் விநியோகம் இருக்காது என சின்னமனூா் மின்வாரிய செயற்பொறியாளா் ராஜ்மோகன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கம்பம்,வடக்குபட்டி, ஊத்துக்காடு, க.புதுப்பட்டி கே.கே.பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சனிக்கிழமை (ஜன.20) காலை 10 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

இதே போல், மேகமலை, ஹைவேவிஸ், மேல்மணலாா், மணலாா் வெண்ணியாா், இரவங்கலாா், மகாராஜாமெட்டு ஆகிய மலைக் கிராமங்கள் கூடலூா், லோயா்கேம்ப், சுருளிப்பட்டி, என்.டி பட்டி, கே.எம் பட்டி, கே.ஜி பட்டி போன்ற பகுதிகளிலும் காலை 10 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com