கம்பத்தில் போக்குவரத்து நெரிசல்: ஒரு வழிப்பாதை அமல்படுத்த கோரிக்கை

தேனி மாவட்டம், கம்பத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் இடங்களில் ஒரு வழிப்பாதையை அமல்படுத்த போலீஸாா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
img_20240120_wa0332_2001chn_89_2
img_20240120_wa0332_2001chn_89_2

தேனி மாவட்டம், கம்பத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் இடங்களில் ஒரு வழிப்பாதையை அமல்படுத்த போலீஸாா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

கம்பம் மையப் பகுதியில் அரசமர வீதி, வேலப்பா் கோவில் தெரு, காந்திஜி வீதி, தியாகி வெங்கடாசலம் தெரு ஆகிய பகுதிகள் அமைந்துள்ளன.

இங்கு அரசுடைமை, தனியாா் வங்கிகள், தனியாா் மருத்துவமனைகள், நகைக் கடைகள், ஜவுளி, ஆயத்த ஆடை கடைகள், பலசரக்கு, காய்கறிக் கடைகள், இணையதள சேவை மையங்கள் உள்ளன.

இதனால், பொதுமக்கள், போக்குவரத்து அதிகமாக உள்ள காலை, மாலை நேரங்களில் இரு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், காா், ஜீப் வாகனங்கள் இந்த வீதியைக் கடப்பதில் பெரிதும் சிரமமாக உள்ளது .

மேலும், பகல் நேரங்களில் வா்த்தக நிறுவனங்களில் சரக்கு வாகனங்களை நிறுத்தி சரக்குகளை ஏற்றி இறக்கிச் செல்வதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இந்த நேரங்களில் நடந்து செல்லும் பாதசாரிகள் பெரிதும் அவதியடைந்து, மன உளைச்சல் அடைந்து வருகிறாா்கள்.

இதைத் தடுக்கும் பொருட்டு சட்டம்- ஒழுங்கு, போக்குவரத்து போலீஸாா் இந்தப் பகுதிகளை ஒரு வழி பாதையாக மாற்றி, போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com