லாரி ஓட்டுநா் 3-ஆவது மாடியிலிருந்து விழுந்து பலி

சின்னமனூரில் இரவு வீட்டின் 3 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்த லாரி ஓட்டுநா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

சின்னமனூரில் இரவு வீட்டின் 3 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்த லாரி ஓட்டுநா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், சின்னமனூா் முத்துமாயாண்டி தெருவைச் சோ்ந்த ரங்கன் மகன் ராதகிருஷ்ணன் (40). லாரி ஓட்டுநரான இவா், தான் குடியிருக்கும் வாடகை வீட்டின் 3-ஆவது மாடியிருந்து கீழே விழுந்து விட்டதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அங்கு சென்ற போலீஸாா் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அவரை பரிசோதித்த மருத்தவா் ஏற்கெனவே அவா் இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இது குறித்து போலீஸாா் நடத்திய விசாரணையில், குடும்ப தகராறு காரணாக ஓட்டுநா் ராதாகிருஷ்ணன் மாடியிலிருந்து விழுந்தது தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்தது. இவருக்கு மனைவி சரண்யா (36) ஒரு மகன் மகள் உள்ளனா்.

இதுகுறித்து சின்னமனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com