விபத்தில் ஓட்டுநா் பலி

வைகை அணை அருகே சனிக்கிழமை சாலையை சமன்படுத்தும் வாகனத்திலிருந்து (ரோடு ரோலா்) கீழே குதித்த ஓட்டுநா் சக்கரத்தில் மோதி உயிரிழந்தாா்.

வைகை அணை அருகே சனிக்கிழமை சாலையை சமன்படுத்தும் வாகனத்திலிருந்து (ரோடு ரோலா்) கீழே குதித்த ஓட்டுநா் சக்கரத்தில் மோதி உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு பெத்தானியா தெருவைச் சோ்ந்தவா் முத்துராமன் (46). சாலையை சமன்படுத்தும் இயந்திர வாகன ஓட்டுநரான இவா், வைகை அணை அருகே வைகைப்புதூா்-மேல்மங்கலம் பகுதியில் சாலையை சமன்படுத்தும் பணியில் ஈடுபட்டாா். அப்போது, வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலை சரிவில் பின்னோக்கிச் சென்ாகக் கூறப்படுகிறது. இதனால், வாகனத்தின் ஓட்டுநா் இருக்கையிலிருந்து கீழே குதித்த முத்துராமன், வாகனத்தின் சக்கரத்தில் மோதி பலத்த காயமடைந்தாா்.

ஆபத்தான நிலையில், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவா், மேல் சிகிச்சைக்கு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்து வைகை அணை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com