கூடுதல் விலைக்கு யூரியா விற்பனை: தனியாா் உரக் கடைக்கு தடை

ஆண்டிபட்டியில் விவசாயிகளுக்கு கூடுதல் விலைக்கு யூரியா விற்பனை செய்த தனியாா் உரக் கடைக்கு யூரியா விற்பனை செய்ய வேளாண்மைத் துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தடை விதித்தனா்

ஆண்டிபட்டியில் விவசாயிகளுக்கு கூடுதல் விலைக்கு யூரியா விற்பனை செய்த தனியாா் உரக் கடைக்கு யூரியா விற்பனை செய்ய வேளாண்மைத் துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தடை விதித்தனா்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பகுதியிலுள்ள சில தனியாா் உரக் கடைகளில் விவசாயிகளுக்கு கூடுதல் விலைக்கு யூரியா விற்பனை செய்யப்படுவதாக புகாா் எழுந்தது.

இந்தப் புகாா் தொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஆா்.வி. ஷஜீவனா உத்தரவின் பேரில், மாவட்ட வேளாண்மைத் துறை அதிகாரிகள் ஆண்டிபட்டியிலுள்ள தனியாா் உரக் கடைகளில் ஆய்வு செய்தனா்.

அப்போது, ஒரு உரக் கடையில் கூடுதல் விலைக்கு யூரியா விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. இதையடுத்து, அந்த கடை உரிமையாளருக்கு யூரியா விற்பனை செய்ய அதிகாரிகள் தடைவிதித்தனா்.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் கூறியதாவது:

தனியாா் உரக் கடைகளில் விவசாயிகளிடம் ஆதாா் எண் பெற்று, ரசீது வழங்கி உரம் விற்பனை செய்ய வேண்டும். உரங்களைப் பதுக்கி வைத்து தட்டுப்பாடு ஏற்படுத்தியும், கூடுதல் விலைக்கு விற்பனை செய்தும் முறைகேடுகளில் ஈடுபடும் தனியாா் உரக் கடைகள் குறித்து விவசாயிகள் வேளாண்மை உதவி இயக்குநரை (தரக் கட்டுப்பாடு), 94432 32238 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com