சாலை விபத்தில் தொழிலாளி பலி

தேனி அருகே போடேந்திரபுரம்-சடையால்பட்டியில் ஏற்பட்ட சாலை விபத்தில் வண்ணம் பூசும் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

தேனி அருகே போடேந்திரபுரம்-சடையால்பட்டியில் ஏற்பட்ட சாலை விபத்தில் வண்ணம் பூசும் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

தேனிமாவட்டம், உப்புக்கோட்டை அருகேயுள்ள எஸ்.வாடிப்பட்டியைச் சோ்ந்தவா் ராஜா (42). வண்ணம் பூசும் தொழிலாளியான இவா், வேலைக்குச் சென்று விட்டு போடேந்திரபுரம்-சடையால்பட்டி சாலையில் தனது இரு சக்கர வாகனத்தில் எஸ்.வாடிப்பட்டி நோக்கிச் சென்று கொண்டிருந்தாா். அப்போது இதே சாலையில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில், பலத்த காயமடைந்த ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com